[இந்த தமிழர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு பட காட்சி]
படம்: தேவர் மகன்
சிவாஜி : "இந்த காட்டுமிராண்டி பய கூடத்தில ஒங்க அப்பனும் ஒருத்தன்தான்"
கமல் : "ஆனா அதை எண்ணி பெருமைப்பட முடியலை அய்யா"
என் சக தமிழர்கள் :
- "எனக்கு தமிழ் சரியா பேசவராது, எழுத தெரியாது" என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள். (இது பெருமையா..?)
- தாய்மொழியின் பெயரைக்கூட "டாமில்" என்று ஆங்கில ஒளியில் உச்சரிப்பவர்கள் (இதில் ஒரு பெருமை)
- அலுவலகத்தில் சக தமிழர்களுடன் தமிழில் பேசுவது அவமானம் என்று நினைப்பவர்கள்.
- நல்ல தமிழில் பேசுபவர்களை ஏற இறங்க பார்ப்பார்கள், சிரிப்பார்கள்.
- ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை பிழை எழுத்து பிழையை பொறுக்க மாட்டார்கள், தமிழில் எவ்வளவு தவறாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.
- தன் தாய்மொழியில் ஒப்பமிடுவதை அவமானமாக கருதுபவர்கள்.
- தமிழ்நாட்டுக்கு செல்லும் கடிதங்களில் கூட தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்.
- நாட்களை சனி, ஞாயிறு என்று தமிழில் சொல்ல மாட்டார்கள், சாட்டேர்டே, சன்டே என்று தன் சொல்வார்கள்.
- எண்களை ஒன்று, இரண்டு என்று சொல்வதற்கு தயங்கி ஒன், டூ என்று தான் சொல்வார்கள்.
இங்கே இவர்களின் தமிழ் உதாரணம் " மார்னிங் ஒரு பங்க்சென் அட்டென் பண்ணினேன், உங்களை அப்புறம் மீட் பண்றேன்", உங்க சன் நேம் என்ன..? " (பாவிகளா பகிரங்கமா மொழிக்கு துரோகம் செய்கிறோம் என்ற உணர்வே இல்லையா..?)
- இந்த நிலை நீடித்தால் தமிழன் பேசும் மொழிக்கு பேர் "தமிழ்" என்று இருக்குமா ...?
- ஆரியம் போல் வழக்கொழிந்து போகாதா..?
- பெற்ற தாயை தாய் என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன அவமானம்..?
- கூடவே பணியாற்றும் சக ஊழியர் தமிழர் என்று தெரிந்தும் தமிழில் பேசுவதில் உங்களுக்கு என்ன அவமானம்..?
- வேலை நேரத்தில் அமெரிக்கனோடு ஆங்கிலத்தில் பேசுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ..அது பணியின் கட்டயாம்..தமிழனோடு ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேசுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்..?
- கூடவே வேலை பார்க்கும் வட இந்தியன் சக வட இந்தியனோடு ஹிந்தியில் பேச வெட்கபடுவதில்லையே
உனக்கும் மட்டும் ஏன் இந்த முதுகெலும்பில்லாத வறட்டு ஆங்கில மோகம்..?
சிந்திப்பீர்....
-சுந்தரேசன் வாசுதேவன்.
neengal solvathu hindi kaaran mel poraamai paduvathu pol irruku.... saturday, sunday, one, two endru englishil solvathil thappillai. Thamizhan thamizh theriyathu endru sonnaal thappillai, enendraal athu avargal petravarkalin valarpu. thandhai, thaai kurai koora mudiyuma? eg: my friend was living his entire school life in dubai..avanuku thamizh ezhutha varuvathu kadinam. gnayam thaane?
ReplyDeletebut ithu thappu...
////
நல்ல தமிழில் பேசுபவர்களை ஏற இறங்க பார்ப்பார்கள், சிரிப்பார்கள்.
////
aanaal, unmaiyaaga sollungal...ithu varai ethavathu thamizhan ithai seithaana? athai neengal paartheergala? naan ithu varai paarthathillai..
appadi neengal paarthal, en saarbaaga avan mugathil oru kuthu vidungal....
mannikavum, thamizhil type seiya theriya villai...
ippadiku, satish
neengal solvathiai eatrukolla eelavillai.. Benny
ReplyDeleteநன்று நன்று
ReplyDeleteஅருமை
ReplyDelete